பருவ நிலை மாற்றம் காரணமாக நோய் பரவும் அபாயம்

April 20, 2017

பருவ நிலை மாற்றம் காரணமாக 106 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மஞ்சள் காமாலை, காய்ச்சல், அம்மை நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இயல்பான வெப்ப நிலையை விட கூடுதலான வெப்பம் இருப்பதால் நண்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை கடுமையான வெயில் நிலவுகிறது. இந்த மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது. அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோர், பல மணி நேரம் நாற்காலி, சோபாவில் அமர்ந்து பணி செய்வோருக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருப்பதால் உடல் ஆரோக்கியம் இழக்கிறது.

இதனால் முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் உபாதைகளும் ஏற்படுகின்றன. இது தவிர மஞ்சள் காமாலை, காய்ச்சல், அம்மை நோய் வேகமாக பரவும் அபாயமும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும். நிகழாண்டு கோடையில் வெப்பம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இரு சக்கர வாகனத்தில் பயணிப்போர் தங்களது முகத்தை துணியால் மறைத்து செல்வதை காணமுடிகிறது. வெயிலின் உக்கிரத்தால் நா வறண்டு மயக்கம் ஏற்படுவதை போன்று உணர்வு ஏற்படுகிறது. வெப்பத்தால் உடலில் நீர்ச்சத்து குறைவதால் பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாக அமைகிறது என மருத்துவர்கள் குறிப்பிட்டனர். இளநீர், தர்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது. சாலையோரங்களில் இருக்கும் கரும்புச்சாறு, வெள்ளரிக்காய் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது.

பிரதானச் சாலையில் செல்லும்போது, வீசும் அனல் காற்றால் பயணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. வெப்பத்தின் தாக்கத்தால் தங்களை பாதுகாத்து கொள்ள அதிகளவில் தண்ணீரை பருக வேண்டும். இளநீர், பழ வகைகள் அதிகமாக உண்ண வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
   

செய்திகள்
செவ்வாய் April 03, 2018

ஈழத்திலே!
பார்வதிகளும்
கணபதிகளும்
கொன்றழிக்கப்பட்டபோது
அந்த பரமசிவனும் வரவில்லை!

ஞாயிறு April 01, 2018

திரைப்பட ரசிகர்கள் அடுத்து என்ன படம் பார்க்கலாம் எனப் பரிந்துரைக்கும் இணையதளங்கள் பல இருக்கின்றன. 

ஞாயிறு April 01, 2018

இணையத்தில் பல வகையான எழுத்துருக்கள் உள்ளன. ஒரு சில எழுத்துருக்கள் எளிமையாகவும்