பறவைகளைப் பார்த்தால் மன அழுத்தம் குறையும்

February 27, 2017

பறவைகளைத் தொடர்ந்து பார்த்தால் மன அழுத்தம் மேம்படும் என, ஆய்வொன்றில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதிகரித்து வரும் செல்போன் டவர்கள், மரங்களை அழிப்பது ஆகிய காரணங்களால் பறவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து உற்சாகம் பிறக்கும் என இங்கிலாந்தை சேர்ந்த எக்ஸீடர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு ஆகியவை குறைவாக இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுதவிர வசிக்கும் வீட்டைச் சுற்றி புதர்கள், மரங்கள் ஆகியவை இருப்பதும் மனிதர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கிறதாம். 

இதுகுறித்து எக்ஸீடர் பல்கலைக்கழக பேராசிரியர் டேனியல் காக்ஸ் “நகரத்தில் வசிப்பவர்களை விட இயற்கையோடு இணைந்து வாழ்பவர்களே அதிக மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்” என கருத்துத் தெரிவித்துள்ளார்.

செய்திகள்
சனி April 29, 2017

தற்போது உலகிலேயே முதல்முறையாக உல்லாசக் கப்பல் ஒன்றில் கார் பந்தய தடத்தையே (Race Track) அமைத்து மக்களை வியக்க வைத்துள்ளனர்.

வியாழன் April 20, 2017

பருவ நிலை மாற்றம் காரணமாக 106 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மஞ்சள் காமாலை, காய்ச்சல், அம்மை நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளி April 07, 2017

உலகின் உள்ள அனைவருக்கும் இயன்றவரை ஆகக் கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே  நோக்கமாகும். 

ஞாயிறு April 02, 2017

3C சான்றிதழ் பெற்ற சியோமி Mi6: சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்கள்.