பலவீனமான ஒரு இனத்தின் பலமான ஆயுதமாக கரும்புலிகள் படையணி

Wednesday July 05, 2017

"பலவீனமான ஒரு இனத்தின் பலமான ஆயுதமாக கரும்புலிகள் படையணியை உருவாக்கினேன்"

இந்த ஒரு வாக்கியத்தில் பொதிந்துள்ள அர்த்தங்களும் அது சொல்லும் செய்தியும் ஒரு கலாநிதி பட்டப்படிப்புக்குத் தேவையான செறிவைக் கொண்டது என்று என்னால் சொல்ல முடியும். எதிர்காலத்தில் இது பற்றிய ஆழமான ஆய்வுகளை கல்வி உலகம் மேற்கொள்ளும்.

"மகாத்மாக்கள்" என்னும் பதம் உண்மையிலேயே அர்த்தம் உள்ள பதமாக இருக்குமாயின் அது கரும்புலிகளுக்கே சாலப் பொருத்தமானது. அனைத்து உயிர்களினதும் வன்முறையின் ஊற்று "மரணபயம்" ஆகும். ஒவ்வொரு உயிரும் தத்தம் இருப்பை உறுதிப்படுத்தும் பொருட்டே வன்முறைக்குள் தஞ்சம் கொள்கிறது. தன் இருப்பையே துறப்பதை விட பெருந்துறவு உலகில் வேறெதுவும் இல்லை. மரண பயத்தை வென்ற பின்னர் அங்கு வன்முறையும் இல்லை.

அவர்கள் கொலையாளிகளும் அல்ல, தற்கொலைப் படையும் அல்ல, பயங்கரவாதிகளும் அல்ல. "கரும்புலிகள்" தம் மக்கள் மீது கொண்ட வரையறையற்ற அன்பினால் தம் உடலையும், உயிரையும் துறந்த துறவிகள். ஆதலால் அவர்களே "மகாத்மாக்கள்"