பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்து பலம் சேர்ப்பது அனைவரது தார்மீக கடமையாகும்!

நவம்பர் 02, 2017

தம் சார்ந்த சமூதாய நோக்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் யாழ். பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆதரவளிப்பது பல்கலைக் கழக நிர்வாகம் உள்ளிட்ட அனைவரது தார்மீக கடமையாகும். மாணவர்கள் மேற்கொண்டு வரும் இப்போராட்டமானது பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு எதிரான போராட்டம் அல்ல என்பதையும் தம் சார்ந்த சமூகத்தின் மீதான அக்கறையில் நடாத்தப்பட்டு வருகிறதென்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வகுப்புகளை புறக்கணித்து அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வந்த மாணவர்களை பல்கலைக் கழகத்திற்கு பூட்டுப் போட்டு முடக்கும் நிலைக்கு தள்ளியது இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கைவிரிப்பே ஆகும்.

அமைதியான வழியில் போராடிய மாணவர்களை பிரச்சினைக்கு பேசித்தீர்வு காணலாம் என்று கூறி அi-ழத்துப் பேசிய ஜனாதிபதி மாணவர்களிடத்தே வழங்கியிருந்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டமையே மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த வழிசமைத்துள்ளது.

சந்திப்பு முடித்து நீங்கள் யாழ்ப்பாணம் செல்வதற்குள்ளே தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நல்லதொரு தீர்வை முன்வைப்பதாக பேச்சு மேசையில் வைத்து ஜனாதிபதியால் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதியானது நிறைவேற்றப்படாது ஒருசில நாள் கழித்து கடந்த புதன்வரை அவகாசம் கோரப்பட்டிருந்தது. புதனும் வந்தது வாக்குறுதி வெள்ளிக்கிழமைக்கு தள்ளிப்போனது.

சில மணித்தியாலங்களில் ஆரம்பித்து புதன் என்றும் பின் வென்ளி என்றும் கால அவகாசம் கோரப்பட்டிருந்தது. இதுவரை வகுப்பு புறக்கணிப்புடன் வரையறுத்து நம்பிக்கையுடன் பொறுமைகாத்திருந்தே இருந்தார்கள். இந்நிலையில்தான் அரசியல் கைதிகள் விடயத்தில் தம்மால் எதுவும் செய்ய முடியாதென்று அரசு தரப்பின் சார்பில் அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் மாணவர் தரப்பிடம் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளார். அதன் பின்னரே வேறு வழியின்றி போராட்டத்தை தீவிரப்படுத்தும் முடிவுக்கு மாணவர்கள் தள்ளப்பட்டார்கள்.

தமிழ் அரசியல் கைதிகள் விடயம் அரசியல் காரணங்களுக்காகவே தீர்வு காணப்படாது இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான அச்சுறுத்தல் நிலையில் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நீதிக்கு புறம்பான முறையில் வழக்கு விசாரணைகள் ஏதுமின்றி பல ஆண்டுகளாக இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதானது இலங்கை அரசாங்கத்தின் தமிழர்கள் மீதான அடக்குமுறையின் வெளிப்பாடாகும்.

தமிழர்களை எந்தவகையிலேனும் அடக்கியாண்டு வருவதன் மூலம் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளை குதூகலப்படுத்தி தமது ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதென்ற கடந்த கால ஆட்சியாளர்கள் பயணித்துவந்த இனவாதவழியிலேயே நல்லாட்சி அரசு என்று கூறிக்கொள்ளும் தற்போதைய அரசும் பயணித்து வருவதன் அண்மித்த சாட்சியாகவே தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசின் நிலைப்பாடு அமைந்துள்ளது.

மயிலே மயிலே இறகு போடு என கேட்டு, தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டுமெனக் காத்திருப்பதில் எதுவித பயனும் இல்லை என்பது வரலாறு மெய்ப்பித்து நிற்கும் பேருண்மையாகும். அதன நன்குணர்ந்தே யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் தமது கற்றல் செயற்பாட்டினையும் கருத்திலெடுக்காது தீர்வு நோக்கியதான அழுத்தத்தினை ஏற்படுத்தும் நோக்கில் வேறு வழியின்றி சாத்வீகப் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளார்கள்.

தேரை இழுத்து தெருவில் விட்ட கதையாக அரசியல் கைதிகள் விடயமும் ஆகிவிடக்கூடாதென்றால் ஒன்றுபட்ட மாபெரும் சக்தியாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியுடன் நின்றால் மட்டுமே தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நல்லதொரு தீர்வினைக்காண முடியும். ஆகவே, பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்களது பெற்றோர், பொது அமைப்புகள், இயக்கங்கள் மற்றும் அரசியல் தரப்பினர் உள்ளிட்ட அனைவரும் பாரபட்சமின்றி ஒன்றுபட்ட ஆதரவினை, தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவான பல்கலைக் கழக மாணவர்களின் சாத்வீகப் போராட்டத்திற்கு வழங்குவது அனைவரதும் தார்மீகக் கடமையாகும்.

இணைப்பு: 
செய்திகள்
ஞாயிறு நவம்பர் 19, 2017

சட்ட விரோதமாக எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்கள் சிறிலங்கா  

ஞாயிறு நவம்பர் 19, 2017

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் தனித்துப் போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.  இந்த விடயத்தை கட்சியின் செயலாளர் நிஷாம் காரியப்பர் தெரிவித்துள்

ஞாயிறு நவம்பர் 19, 2017

மாவீரர் தினத்தன்று வணக்க நிகழ்வுக்கு ஏற்பாடு, மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர் துயிலும் இல்லத்தில்...