பல நூறு இளைஞர்களுடன் சென்னையை வலம் வந்த விஜய்!

Sunday April 29, 2018

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 62’ படத்திற்காக பல நூறு இளைஞர்களுடன் பைக்கில் சென்னையை வலம் வந்திருக்கிறார் நடிகர் விஜய். 

விஜய் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக சென்னை பச்சையப்பன் கல்லூரியில், இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. கல்லூரி மாணவர்களுடன், பைக்கில் விஜய் ஊர்வலமாக போவது போல் ஒரு காட்சியை படமாக்கினார்கள்.

அந்த காட்சியின் புகைப்படத்தையும், வீடியோவையை ரசிகர் ஒருவர் இணையதளத்தில் வெளியிட, அது வைரலாக பரவி வருகிறது. அதைப்பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். 

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.