பல மருத்துவ குணங்கள் உடையது பனங்கிழங்கு!

புதன் சனவரி 30, 2019

பல மருத்துவ குணங்களை உடைய பனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்:

* குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக் கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும்

* பனங்கிழங்கை வேக வைத்து, சிறு சிறு துண்டாக நறுக்கி, காய வைத்து, அதனுடன், கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால், உடலுக்கு தேவையான இரும்புச் சத்து கிடைக்கும்

* பனங்கிழங்குடன், தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டால், உடல் உறுப்புகள் பலம் பெறும். பெண்களின் கர்ப்பப்பை பலம் பெறும்

* பனங்கிழங்கு, வாயு தொல்லையுடையது. எனவே, இதை தவிர்க்க, பனங்கிழங்குடன், பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து, மாவாக்கி சாப்பிடலாம். இனிப்பு தேவைப்படுவோர், கருப்பட்டி சேர்த்து இடித்து சாப்பிடலாம்

* நார்சத்து அதிகம் இருப்பதால், இதை உண்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

* வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு உள்ளோர், பனங்கிழங்கு மாவை, உணவில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து, அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிடலாம்

* பனங்கிழங்கில், பித்தம் அதிகமாகவே உள்ளது. எனவே, இதை சாப்பிட்ட பின், மிளகை கொஞ்சம் வாயில் போட்டு மென்றிட, உடலுக்கு வலு கிடைப்பதுடன், ஆரோக்கியம் உண்டாகும்.