பள்ளி ஆசிரியர் வேடத்தில் சீமான்!

Thursday December 06, 2018

சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த சீமான். தற்போது தவம் என்னும் படத்தில் விவசாயியாக நடித்துள்ளார்.

படத்தை ஆர்.விஜயானந்த், ஏ.ஆர்.சூரியன் இருவரும் இயக்கி உள்ளார்கள். படம் பற்றி இயக்குனர்கள் கூறும்போது ‘இது விவசாய பின்னணியில் உருவான படம். புதுக்கோட்டை பகுதியில் நடக்கும் கதை. நாயகன் வசீ ஏ டூ இசட் என்ற நிறுவனம் நடத்துபவர்.

ஒரு திருமணத்துக்காக அவரை சந்திக்கும் நாயகி பூஜாஸ்ரீ அவருடன் நட்பாகிறார். பூஜாஸ்ரீ தேடிக்கொண்டிருக்கும் நபர் வசீ என்பது தெரிய வருகிறது. அவர் ஏன் வசீயை தேடுகிறார் என்பதே கதை. இரண்டாம் பாதி பிளாஷ்பேக்கில் நாயகனின் தந்தையாக சீமான் வருகிறார்.

1996-ல் நடக்கும் கதையில் பள்ளி ஆசிரியராக இருந்துகொண்டு விவசாயத்தை காப்பாற்ற போராடும் வேடம். படத்தின் இரண்டாவது நாயகன் என்று அவரை குறிப்பிடலாம். நடிப்பதை தவிர்த்து வந்தவர் இந்த வேடத்தின் முக்கியத்துவத்தை சொன்ன பிறகே ஒப்புக்கொண்டார். இவர்களுடன் சிங்கம்புலி, போஸ் வெங்கட், சந்தானபாரதி ஆகியோரும் நடிக்கிறார்கள்’.