பாகிஸ்தானுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

Wednesday June 13, 2018

பாகிஸ்தானில் இடம்பெறும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னால் நேற்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

 இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் போராடி வருகின்ற நிலையில், பாகிஸ்தான் உள்ளிட்ட ஏனைய தெற்காசிய நாடுகளிலும் காணாமல் ஆக்கப்படுதல்கள் தொடர்வதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 பாகிஸ்தானில் ஆறு மாதங்களுக்கு முன்னர் சமாதான செயற்பாட்டாளர் ரஸா கான் கடத்தப்பட்டுள்ளார்.  இந்த நிலையில், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் பாகிஸ்தான் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்டுள்ள 4 ஆயிரத்து 804 சம்பவங்களில் ஆயிரத்து 640 சம்பவங்கள் தீர்க்கப்படாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.