பாகிஸ்தான்: மசூதி அருகே தற்கொலைப்படை தாக்குதல்!

ஒக்டோபர் 05, 2017

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகணத்தில் மசூதி அருகே தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் ஜால் மக்சி பகுதியில் உள்ள மசூதியில் இன்று தொழுகை நடைபெற்றது. அப்போது அந்த மசூதிக்குள் ஒரு தீவிரவாதி நுழைய முயன்றுள்ளான். அவனை அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை  கான்ஸ்டெபிள் தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதயடுத்து அந்த தீவிரவாதி தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். இந்த சம்பவத்தில் காவல் துறை  கான்ஸ்டெபிள் உட்பட 12 பேர் பலியானதாக முதல்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் ஜால் மக்சியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன்னும் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் இப்பகுதியில் உள்ள ஒரு மசூதி அருகில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 52 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள்