பா.ஜ.க.வை எதிர்த்தே கருத்து தெரிவித்தேன் - விஜயதரணி

August 06, 2017

தினகரனை மட்டும் ஆதரித்து பேசவில்லை, பா.ஜ.க.வை எதிர்த்தே கருத்து தெரிவித்தேன் என்று எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம் அளித்துள்ளார்.

டி.டி.வி. தினகரனை சந்தித்தது மற்றும் அவர் பற்றி தெரிவித்த கருத்துக்களால் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் பற்றி எம்.எல்.ஏ. விஜயதரணி கூறியதாவது:-

டி.டி.வி. தினகரனை நான் சந்தித்தது அவரது மாமியார் மரணம் பற்றி துக்கம் விசாரிக்கதான். எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தினகரனை ஆதரிக்க வேண்டும். அவர்தான் கட்சியை வழி நடத்தி செல்லும் தலைவர் என்ற அர்த்தத்தில் நான் கருத்து கூறவில்லை. நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

டி.டி.வி. தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றுபட்டு செயல்பட்டால் தான் அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் அ.தி.மு.க. அழிந்து விடும் என்றுதான் நான் கூறினேன்.

தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத பா.ஜனதா தமிழக சட்டசபையை கட்டுப்படுத்துகிறது. அந்த கட்சி, அ.தி.மு.க.வை கட்டுப்படுத்தி அழிக்க நினைக்கிறது. தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க.வை அழித்து விட்டு தமிழகத்தில் காலூன்ற பா.ஜனதா நினைக்கிறது. அது ஒருபோதும் நடக்காது. அந்த வகையில்தான் நான் கருத்து தெரிவித்தேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை செயல்படவிடாமல் பா.ஜனதா முடக்க நினைக்கிறது. மத்திய அரசு, தமிழக அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. ஜி.எஸ்.டி., நீட் தேர்வு, மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீடு என்று பல வி‌ஷயங்களில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. மாநில அரசு, மத்திய அரசிடம் மண்டியிட்டு நடத்தும் அளவிற்கு மத்திய அரசு இயக்கி வருகிறது.

காங்கிரஸ் கட்சியை சோனியாகாந்தி, ராகுல்காந்தி திறம்பட வழி நடத்தி செல்கிறார்கள். தமிழகத்தில் மக்கள் பிரச்சினைக்காக காங்கிரஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. டி.டி.வி. தினகரனை நான் சந்தித்ததை தமிழக தலைவர் திருநாவுக்கரசர் புரிந்து கொண்டு விளக்கம் அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

செய்திகள்
புதன் யூலை 18, 2018

காவல்துறையைக் கைத்தடி துறை ஆக்காதே! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!