பாடகியாகும் அமலா பால்!

January 11, 2017

மலையாளத்தில் கண்ணன் தாமரக்குலம் இயக்கும் படம் ‘அச்சாயன்ஸ்’. ஜெயராம், பிரகாஷ்ராஜ், அமலா பால் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் ரதீஸ் வேகா இசையில் பாடல் ஒன்றைப் பாட இருக்கிறார் அமலா பால். 

அந்தப் பாடலுக்கான ட்யூனை தயார் செய்யும் பணியில் இருக்கும் இசையமைப்பாளர் ரதீஸ் இன்னும் ஒரு வாரத்துக்குள் பாடலை பதிவு செய்துவிடுவோம் எனக் கூறியிருக்கிறார். “இப்போது பாடவில்லை என்றால் பிறகு எப்போது பாடுவது?” எனக் கூறி பாடல் பதிவுக்காக காத்திருக்கிறார் அமலா பால். 

கன்னடத்தில் சுதீப்புடன் ‘ஹேபுலி’ படத்தில் நடித்து முடித்திருக்கும் அமலா பால், தற்போது முண்டாசுபட்டி ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷாலுடன் ஒரு படம், தனுஷுடன் வேலையில்லா பட்டாதாரி 2, வட சென்னை, சுசி கணேசன் இயக்கும் திருட்டுப் பயலே 2 ஆகிய படங்களில் பிஸி.

செய்திகள்
செவ்வாய் May 08, 2018

பாலிவுட் நடிகையும் நடிகர் அனில் கபூரின் மகளுமான சோனம் கபூர் தனது காதலரை இன்று  மணந்தார்.