பாடசாலை களஞ்சியசாலையில் இருந்து கைக்குண்டு கண்டெடுப்பு!

Wednesday February 14, 2018

திருகோணமலை நகரத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் களஞ்சியசாலையினுள் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இன்று(14) காலை களஞ்சியசாலையை சுத்தப்படுத்தும் போது கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது J.R-SFG-87 வகையைச் சேர்ந்த கைக்குண்டு என காவல் துறையினர்  தெரிவித்தனர். 

மேலும் ஸ்தலத்திற்கு வந்த விசேட அதிரடி காவல் துறை கைக்குண்டை எடுத்துச்சென்றனர்.