பாதுகாப்பு படை வீரர்களை தாக்கியவர்களுக்கு கமல் கண்டனம்

April 15, 2017

காஷ்மீரில் உள்ள பக்தாம் மாவட்டத்தில் தேர்தல் பணிகளை முடித்து விட்டு சாலை ஓரமாக அமைதியாக சென்று கொண்டிருந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சிலரை இளைஞர்கள் வழிமறித்து தாக்கினார்கள். பின்னால் ஓடிச்சென்று வீரர்களின் தலையிலும் தோள்களிலும் ஓங்கி அடித்தனர். சிலர் பாதுகாப்பு படை வீரர்களின் கால்களை இடறி விட்டு கீழே தள்ளிவிடவும் முயற்சித்தனர்.

தங்களை அடித்த இளைஞர்கள் மீது பாதுகாப்பு படை வீரர்கள் ஆத்திரப்படவில்லை. துப்பாக்கியை கையில் வைத்திருந்தும் அதை காட்டி மிரட்டவும் இல்லை. அடியை வாங்கிக்கொண்டு அவர்கள் அமைதியாக நடந்து சென்றார்கள். இந்த காட்சி வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி பார்த்தவர்களை பதற வைத்தது. தனியார் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. இந்த சம்பவத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஷேவாக், கம்பீர் ஆகியோர் ஏற்கனவே கண்டித்து உள்ளனர்.

 இந்தநிலையில் நடிகர் கமல்ஹாசனும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

“இந்தியாவுடன் ஒருங்கிணையுங்கள். என்னுடைய பாதுகாப்பு படை வீரர்களை இளைஞர்கள் தாக்கியது வெட்கக்கேடானது. உயர்வான வீரம் என்பது அகிம்சை. இளைஞர்கள் மீது பதிலுக்கு தாக்குதல் நடத்தாமல் இருந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் அதற்கு சிறந்த உதாரணமாக இருக்கிறார்கள்.” இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

செய்திகள்
செவ்வாய் May 08, 2018

பாலிவுட் நடிகையும் நடிகர் அனில் கபூரின் மகளுமான சோனம் கபூர் தனது காதலரை இன்று  மணந்தார்.