பாராளுமன்ற சபாநாயகராக பதவியேற்ற இஸ்லாமிய பெண்

வியாழன் மே 12, 2016

ஜேர்மன் நாட்டு மாகாண பாராளுமன்ற வரலாற்றில் முதன் முதலாக இஸ்லாமிய பெண் ஒருவர் சபாநாயகராக தெரிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் Christian Democratic Union (CDU) கட்சியுடன் கிரீன் கட்சி கூட்டணியாக இயங்கி வருகிறது.

இந்த கிரீன் கட்சியை சேர்ந்த Muhterem Aras(50) என்பவர் Baden-Wurttemberg என்ற மாகாணத்தின் வரி மற்றும் நிதி தொடர்பான அரசு ஆலோசகராக பணியாற்றி வந்துள்ளார்.

இஸ்லாமியரான இவர் தான் தற்போது Baden-Wurttemberg மாகாண பாராளுமன்றத்தின் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், ஜேர்மன் மாகாணங்களில் உள்ள பாராளுமன்ற வரலாற்றில் ஒரு இஸ்லாமியர் சபாநாயகராக தெரிவாகியுள்ளது இதுவே முதல் முறை ஆகும்.

 ஜேர்மன் வரலாற்றில் முதன் முறையாக ஒரு இஸ்லாமிய பெண் மாகாண பாராளுமன்ற சபாநாயகராக தெரிவாகியுள்ளதன் மூலம் ‘நாங்கள் ஒரு வரலாற்றை தொடங்கியுள்ளோம்’ என அவர் பெருமைப்படக் கூறியுள்ளார்.

இதேபோல், பிரித்தானிய வரலாற்றில் முதன் முறையாக தலைநகரான லண்டன் நகருக்கும் பாகிஸ்தான் பின்னணி உள்ள சாதிக் கான் என்பவர் அண்மையில் மேயராக தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.