பாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி...!

வியாழன் சனவரி 31, 2019

சிங்கள இனவாத அரசால் கொடூரமான இன அழிப்புக்குள்ளான தமிழீழ மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பாரிய வரலாற்றுக் கடமையைச் சுமந்துள்ள புலம்பெயர் தமிழர்கள் எதிர்வரும் மார்ச் 04 ஆம் திகதி ஜெனிவாவின் முருகதாசன் திடலில் ஒன்று திரள்கின்றார்கள்.

தமிழீழ மக்களின் விடிவுக்காகவும், தமிழீழ மண்ணின் விடுதலைக்காகவும் முன்னெடுக்கும் இந்த உச்சக்கட்ட ஜனநாயகப் போரில் புலம்பெயர் தமிழர்கள் அனைவரது பங்கேற்பும் மிக மிக அவசியானது என உணரப்பட்டுள்ளது. அதன் ஒரு பாதை பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் திறக்கப்பட்டுள்ளது.

04 மார்ச் காலை 6 மணிக்கு லாச்சப்பலில் இருந்து பேருந்துகள் புறப்படும் என, பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

1