பாரிசில் உணர்வுடன் நினைவுகொள்ளப்பட்ட தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகள் நாள்!

யூலை 06, 2017

பிரான்சு பாரிசில் தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகள் நாள் 2017 பாரிஸ் மக்ஸ்டொமிப் பகுதியில் 05.07.2017 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு, மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரை பிரான்சு மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் நித்தி முகுந்தினி அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை 03.12.2007 அன்று கரிப்பட்டமுறிப்பில் வீரச்சாவைத்தழுவிய வீரவேங்கை யாழ்நம்பியின் சகோதரி ஏற்றி வைத்தார். வீரவேங்கை ஞானம் அவர்களின் சகோதரன் மலர்வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் தீபம் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர். இதனையடுத்து செவ்ரோன் தமிழ்ச்சோலை, பரிஸ் 15, பரிஸ் 17, திரான்சி தமிழ்ச்சோலை மற்றும் ஆதிபராசக்தி நாட்டியபள்ளி மாணவிகளின் கரும்புலிகள்நினைவு சுமந்த எழுச்சி நடனங்கள், மற்றும் பரிஸ் 13 தமிழ்ச்சோலை மாணவிகளின் கரும்புலி நினைவு சுமந்த பாடல்கள் என்பனவும் இடம்பெற்றன.

நிகழ்வில் சிறப்புரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்களான  திரு.மேத்தா, திரு.கோகுலன் ஆகியோர் தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகளின்  ஈகம்பற்றிய சிறப்புக்களை எடுத்துவிளக்கியிருந்தனர்.  நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன், தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.

இணைப்பு: 
செய்திகள்
வியாழன் May 24, 2018

பிரான்சில் மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்டம் மற்றும் துடுப்பெடுத்தாட்டப் 

புதன் May 23, 2018

யேர்மன் அரசாங்கத்தின் வரலாற்றுப் பொறுப்பு என கூட்டாக வலியுறுத்தப்பட்டது. 

செவ்வாய் May 22, 2018

முள்ளிவாய்க்கால் முற்றம்" இதழ்  7 - சிறுவர்களின் வெளியீடு - தமிழ் பெண்கள் பெண்கள் யேர்மனி

செவ்வாய் May 22, 2018

20.5.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் மிகச்சிறப

செவ்வாய் May 22, 2018

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத் துறையின் அனுசரணையுடன் பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான வில்நெவ் சென்ஜோர்ஜ் தமிழ்ச் சங்கம் நடாத்திய இல்ல மெய்வல்லுநர்ப் போட்டி 2018 கடந்த ச