பாரிஸில் 27 நாள் மழை இரண்டே மணி நேரத்தில்!

யூலை 10, 2017

பிரான்சின் தலைநகர் பாரிஸில் சாதாரணமாக 27 நாட்களில் பெய்யும் மழை, இரண்டே மணி நேரங்களில் பெய்து தீர்த்துவிட்டது. பாரிஸில் இரண்டு மணிநேரம் வீசிய புயலினால், ஞாயிற்றுக்கிழமை இரவு 54 மிமீ (2.1 இன்ச் ) மழை பெய்தது. இது 27 நாட்களுக்கு பெய்யும் மழைக்குச் சமமானது.

ஒரு மணி நேரத்திற்கு 49.2 மிமீ மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரிஸில், ஜூலை மாதத்தில் பெய்த மழைகளிலே அதிகபட்ச பொழிவாக இது பதிவாகியுள்ளது.

வெள்ளத்தால் 20 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. பாரிஸ் பயணிகள் திங்கட்கிழமை காலை வேலைக்கு செல்லத் தொடங்கிய நிலையில், இன்னும் பல ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன.

 கொட்டும் மழையிலும் அணிவகுப்பு பயிற்சி மேற்கொள்ளும் தீயணைப்புத்துறை வீரர்கள் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளும் பலத்த காற்று மற்றும் புயல்களால் தாக்கப்பட்டன. இதனால் இங்கு வார இறுதியில் வெள்ளம் ஏற்பட்டது.

வெள்ளத்தால் 20 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. பாரிஸ் பயணிகள் திங்கட்கிழமை காலை வேலைக்கு செல்லத் தொடங்கிய நிலையில், இன்னும் பல ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன.

சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளும் பலத்த காற்று மற்றும் புயல்களால் தாக்கப்பட்டன. இதனால் இங்கு வார இறுதியில் வெள்ளம் ஏற்பட்டது. பாரிஸில் ஞாயிறு இரவு 21.00 மணிக்குப் பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. ஜூலை 2, 1995-ம் ஆண்டு பிரான்ஸில் அதிகபட்ச மழையாக 47.7 மிமீ மழை பதிவானது. அதைக் காட்டிலும் தற்போது அதிகளவு மழை பெய்திருக்கிறது என பிரான்ஸ் வானிலை மையம் கூறியுள்ளது.

செய்திகள்