பார்வையற்றவராக நடிக்கும் வரலட்சுமி!

வியாழன் ஜூலை 05, 2018

ஜே.கே. இயக்கத்தில் பார்வையற்ற பெண்ணாக வரலட்சுமி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது.தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் மிஸ்டர். சந்திரமௌலி படம் வருகிற வெள்ளியன்று ரிலீசாக இருக்கிறது.

வரலட்சுமி நடிப்பில் அடுத்ததாக சண்டக்கோழி 2, எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், கன்னிராசி, வெல்வட் நகரம், சர்கார், மாரி 2, நீயா 2, பாம்பன், சக்தி என படங்கள் வரிசைக்கட்டி வருகின்றன. 

இந்த நிலையில், வரலட்சுமியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி வரலட்சுமி அடுத்ததாக ஜே.கே. என்ற புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் பார்வையற்ற பெண்ணாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. சாய் சமரத் மூவிஸ் சார்பில் ஜெயப்பிரகாசா, பவித்ரா கே.ஜெயராம் தயாரிக்கும் இந்த படத்திற்கு மேத்யூ ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, சாம்.சி.எஸ். இசையமைக்கிறார்.