பாலியல் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்!

Sunday April 29, 2018

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார்.  1960-ல் இருந்து 70 வரை தமிழ் பட உலகில் பிரபலமாக இருந்தவர், நடிகை சாவித்ரி. கதாநாயகியாக, தயாரிப்பாளராக, டைரக்டராக புகழ் பெற்று விளங்கினார். இவருடைய வாழ்க்கை வரலாறு ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் தமிழிலும், ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கிலும் படமாகி இருக்கிறது.

அதில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார். ஜெமினிகணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். பத்திரிகையாளராக சமந்தா நடித்து இருக்கிறார். நாக் அஸ்வின் டைரக்டு செய்து இருக்கிறார். இப்படம் மே 11ம் திகதி வெளியாக இருக்கிறது. 

இந்நிலையில், சமீபகாலமாக சிறுமி கற்பழிப்பு, நடிகையை கடத்தி பலவந்தம், படுக்கையை பகிர்ந்து கொண்டால்தான் பட வாய்ப்பு என பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், ‘பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இன்னொரு முறை அவர்கள் குற்றங்கள் செய்ய முடியாத அளவுக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.