பாவப்பட்ட பணம், தவராசா வீட்டு வாசலில்

June 12, 2018

சிங்கள அரசு தமிழ் மக்களைக் கோரமாக படுகொலை செய்தமையை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா வழங்கிய பணம் அவரது வீட்டு வாசலில் இன்று (12) போடப்பட்டது.

மேற்படி நிகழ்விற்குத் தான் வழங்கிய 7 ஆயிரம் ரூபா நிதியை மீளத் தருமாறு வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கோரியிருந்தார். 

இதையடுத்து கிழக்கு மாகாண இளைஞர்கள் 7 ஆயிரம் பேரிடம் சேகரிக்கப்பட்ட 7 ஆயிரம் ரூபா பணம் எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவின் வீட்டிற்கு முன்னால் உரப்பை ஒன்றில் கட்டிப் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். 

கடந்த மாதம் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகம், தமிழகம் மற்றும் புலம்பெயர் நாடுகள் எங்கும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன.

அந்த நிகழ்வுக்காக வடமாகாண சபை உறுப்பினர்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட நிதியில் இருந்து தனது பணத்தை மீளத் தருமாறு, வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா கோரியிருந்தார்.

பிரதான நினைவேந்தல் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணுக்குத் தான் சென்றபோது தனக்கு  உரிய கௌரவம் வழங்கப்படவில்லை என்பதாலேயே பணத்தை மீளக் கோருகின்றார் எனவும் அவர் கூறினார். 

இந்த நிலையில், தவராசாவிற்கு வழங்குவதற்காக கிழக்கு மாகாண இளைஞர்கள், கடந்த வாரம் வீதி வீதியாக உண்டியல் ஏந்தி நிதியைச் சேகரித்திருந்தனர். அந்த நிதியை இன்று (12) வடமாகாண சபைக்குக் கொண்டு சென்று மீளக்கையளிக்க முயற்சித்தனர்.

எனினும் அந்தப் பணத்தை பெற்றுக்கொள்ள வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் மறுப்புத் தெரிவித்த போது முதலமைச்சரை சந்தித்து பணத்தை கையளிக்க முற்பட்டனர்.

முதலமைச்சரும் பெற்றுக்கொள்ள மறுத்த நிலையில் அந்த பணத்தை கொக்குவில் பகுதியில் உள்ள வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவரின் வீட்டுக்கு சென்று வாசலில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கொழும்பில் இருப்பதனால், வடமாகாண சபையின் அமர்வில் கலந்துகொள்ளவில்லை.

அதனால் பாவப்பட்ட பணம் எனப் பொறிக்கப்பட்டிருந்த அந்த பணப் பையை அவரது வீட்டு வாசலில் போட்டுவிட்டு அந்த இளைஞர்கள் சென்றுள்ளனர்.

இணைப்பு: 
செய்திகள்
திங்கள் யூலை 16, 2018

வனவள விலங்கை துன்புறுத்துவது எந்தளவு தூரம் சட்டப்படி தவறான விடயமோ அவ்வாறான விலங்குகளை கூட்டில் அடைந்து அனுமதியின்றி மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் வளர்ப்பதும் தவறான விடயமே என்று தமிழ்த் தேசியக் க

திங்கள் யூலை 16, 2018

வடக்கு கிழக்கில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்படவோ, இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்படவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவத் தளபதி மகேஸ்சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

திங்கள் யூலை 16, 2018

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.