பி.சி.சி.ஐ.க்கு சச்சின் கடிதம்!

புதன் பெப்ரவரி 07, 2018

பார்வையற்றோர் கிரிக்கெட் அமைப்பை அங்கீகரித்து அந்த வீரர்களை பி.சி.சி.ஐ.யின் கீழ் நிர்வகித்து விளையாட வைக்க வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் பி.சி.சி.ஐ நிர்வாக தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணி நான்கு முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. இருந்தாலும், பார்வையற்ற வீரர்களுக்கு அங்கீகாரம் மற்றும் நிதியுதவி குறைவாகவே கிடைக்கிறது. சமீபத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி உலகக்கோப்பை வென்ற போது பி.சி.சி.ஐ வீரர்களுக்கு பரிசுகளை வழங்கியது.

இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாக கமிட்டி தலைவரான வினோத் ராய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பார்வையற்ற வீரர்களை வாரியத்தின் பென்சன் திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனால், வீரர்கள் நீண்ட கால பயன்களை பெறுவார்கள் என்றும், வீரர்கள் உறுதியுடன் விளையாடுவார்கள் என்றும் சச்சின் தனது கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.