பின்லாந்து மாவீரர் நாள் 2017

Wednesday November 29, 2017

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஒழுங்கு படுத்தலில் மாவீரர் நாள் நிகழ்வுகள் பின்லாந்தின் தலைநகர்  ஹெல்சிங்கில்  மாலை 4 மணியளவில் ஆரம்பமாகியது.  
 
முதலாவது நிகழ்வாக தமிழீழ தேசிய  கொடி ஏற்றப்பட்டது   தமிழீழ தேசிய  கொடியினை   மாவீரர் 2 லெப் வதனன் அவர்களின் சகோதரர் ஏற்றி வைத்தார்.

  அதனை தொடர்ந்து மாவீரர்நாள் அறிக்கை ஒலிபரப்பபட்டது. தொடர்ந்து மாவீரர் நினைவு மணி ஒலி எழுப்பப்பட்டு பிரதானசுடர் ஏற்றப்பட்டது. தொடர்ந்து  மாவீர்களுக்கும் போரினால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கும் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது. 
மலர் வணக்கமும்   செலுத்தப்பட்டது.

நோர்வேயிலிருந்து வருகைதந்த தமிழீழ எழுச்சி பாடகர்களின் எழுச்சிபாடல்களும் அன்னை பூபதி கலைக்கூட மாணவர்களினதும் எமது உறவுகளினதும்   மாவீரர்களின் ஈகத்தைபோற்றும் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன .

நிறைவாக  உறுதி உரை எடுக்கப்பட்டு தேசியக்கொடி இறக்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவுபெற்றன.