பிரகாஸ்ராஜை கொல்ல திட்டம்?

திங்கள் ஜூலை 02, 2018

கர்நாடகாவில் பத்திரிகையாளர் கௌரி  லங்கேசை படுகொலை செய்த நபர்கள் நடிகர் பிரகாஸ்ராஜ் உட்பட மேலும் 35 பேரை படுகொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்தனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த பத்திரிகையாளர் கவுரிலங்கேஸ் பெங்களுரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் கேல் என்ற நபரிடமிருந்து  டயறியொன்றை  காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.  இந்த டயரி மூலம் பிரகாஸ்ராஜ் உட்பட 35 பேரை படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தமை அம்பலமாகியுள்ளது.

இதற்காக இந்து மதத்துடன் தீவிர ஆர்வம் கொண்டுள்ள 50 பேரை பயன்படுத்த திட்டமிடப்பட்டமையும் டயரி மூலம் தெரியவந்துள்ளது. மதக்கலவரங்களை தூண்டிய 50 பேரை கொலைகளிற்கு ஈடுபடுத்தவும் அவர்களிற்கு துப்பாக்கி அளிக்கும் பயிற்சிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டதும் டயரி மூலம் அம்பலமாகியுள்ளது.

நடிகர்பிரகாஸ்ராஜ் மத்திய அரசை பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது