பிரதமர் பதவி குறித்து சபாநாயகர் கரு ஜயசூரிய!

Wednesday February 14, 2018

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரும் இணைந்து செல்வதே தனது எதிர்பார்ப்பு என்று சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளையடுத்து கூட்டு அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக, சபாநாயகர் கரு ஜயசூரியவை அடுத்த பிரதமராக நியமிக்க வேண்டும் என்று கூறப்படும் கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் அவரிடம் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறினார். 

அந்தப் பதவியை தான் கேட்கவில்லை என்றும், இருவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே தனது பிரார்த்தனை என்றும் அவர் கூறியுள்ளார். தேசிய அரசாங்கத்திற்குள் தற்போது பிரச்சினை இருக்கின்றதே என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், அது சம்பந்தமாக தனக்கு தெரியாது என்றும், தான் தற்போது சபாநாயகர் என்பதால் நடுநிலையாகவே இருப்பதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.