பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐ.தே.க உறுப்பினர்?

செவ்வாய் ஏப்ரல் 17, 2018

வெற்றிடமாகியுள்ள பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரொருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயரும் குறித்த பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லையென்றும், ஐக்கிய தேசியக் கட்சியின்  அடுத்த நாடாளுமன்றக் குழு கலந்துரையாடலின் போது, இதுதொடர்பில் கலந்துரையாட பின்வரிசை உறுப்பினர்கள் தயாராகவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதிசபாநாயகர் திலங்க சுமதிபால அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளமையால் ஏற்பட்ட வெற்றிடமானது நாடாளுமன்றத்தின் இரண்டாம் அமர்வுகளின் போது, நிரப்பப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.