பிரதேச செயலாளருக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Tuesday August 21, 2018

வவுனியா வடக்கு பிரதேசச் செயலாளர் பரந்தாமனுக்கு எதிராக, மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனால், கொழும்பில் உள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நேற்று (20) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, சுமார் 55 குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆவணங்களை, மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், ஆணைக்குழுவின் செயலாளர் திருமதி சாந்தி ஜெயசேகராவிடம் கையளித்தார்.

இதையடுத்து, அவ்வறிக்கையைப் பெற்றுக்கொண்ட ஆணைக்குழுவின் செயலாளர் இதற்கான நடவடிக்கையை உடன் எடுப்பதாக உறுதியளித்தார்.  இதேவேளை, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் கணக்காய்வாளர் நாயகம் குணவர்தன ஆகியோருக்கும் இந்த ஆவணங்களை,  லிங்கநாதன் கையளித்தார்.