பிரமிட் பண ஆசையில் பிணமாகும் முட்டாள்கள்!

வியாழன் ஏப்ரல் 21, 2016

Global எனும் பெயரில் சில சமூக விரோதிகள் அப்பாவி மக்களை இத் திட்டத்தால் ஏமாற்றி வருகின்றார்கள். பிரமிட் திட்டத்துக்கு மாற்று பெயர்கள் வைத்து நடத்துகிறார்கள் ….. தயவு செய்து மக்கள் இவற்றுக்கு ஏமாற வேண்டாம் … கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பாகங்களிலும் பிரமிட் வியாபாரம் / வலையமைப்பு வியாபாரம் (Network Business) அல்லது GLOBAL LIFE STYLE எனும் பெயர்களில் பொது மக்களை ஏமாற்றி வியாபாரம் செய்து கொண்டிருக்கும் பல அமைப்புக்களை கானக் கூடியதாக இருக்கின்றது. இவ் அமைப்புகள் பொது மக்களை மூலைச் சலவை செய்து அவர்களது வியாபாரமானது நன்மை பயக்கக் கூடியது என்று பொது மக்களை ஏமாற்றுகின்றார்கள். இவ் வியாபாரத்தில் அதிகம் எமது தமிழ் சமூகம் ஏமற்றப்பட்டிறுப்பதை அறிந்ததனால் பதிவேற்றம் செய்கிறோம் பிரமிட் பண ஆசையில் பிணமாகும் யாழ்ப்பாண முட்டாள்கள்!

தற்போது வடபகுதியை உலுப்பிக் கொண்டு இருக்கின்றது பிரமிட் எனப்படும் பணமோசடிக் கும்பலின் வியாபாரம். முக்கியத்துவம் இல்லாத பொருட்களையும் பெறுமதி குறைந்த பொருட்களையும் அதி கூடிய விலைக்கு விற்பனை செய்வதற்கு மோசடிக் கும்பலால் உருவாக்கப்பட்டதே பிரமிட் எனப்படும் பண மோசடி வியாபாரமாகும்.

அத்துடன் அப் பொருளை ஏனையவா்கள் வாங்கினாலும் உடனடியாக அவருக்கு பணம் கிடைக்காது எனத் தெரிவித்து குறித்த புள்ளிகள் எடுத்தாலே பணம் கிடைக்கும் என மோசடிக் கும்பல்கள் தெரிவிக்கின்றன.

உதாரணமாக ஒரு சூரிய மின்கலத்தின் பெறுமதி 25 ஆயிரம் ரூபா எனின் குறித்த பிரமிட் மோசடி செய்யும் கும்பல் அதே சூரிய கலத்தை ஏதாவது ஒரு நாட்டில் இருந்து இறக்குமதி செய்து 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்கின்றது. இதை வாங்கும் ஒரு நபா் தனக்கு தெரிந்த இரு நபா்களை அந் நிறுவனத்திற்கு அறிமுகப்படுத்தினால் அந் நபருக்கு குறித்த ஒரு தொகை கொடுப்பதாக உறுதியளிக்கப்படுகின்றது.

இதே வேளை அறிமுகப்படுத்தி நபா்களும் வேறு சிலரை அப் பொருளை வாங்கச் செய்தால் முதலில் அவா்களை அறிமுகம் செய்த நபரும் பின்னா் அறிமுகம் செய்த நபா்களும் புள்ளிகள் வழங்கப்பட்டு பெருமளவு நிதி வரும் என ஏமாற்றப்படுகின்றது. இவ்வாறான ஒரு நிலை குறித்த ஒரு மட்டத்துடன் நின்று விடும். ஏனெனில் இவற்றை வாங்குவதற்கு ஆட்கள் இல்லாத காரணத்தாலும் போட்டி நிலை ஏற்படுவதாலும் இவா்களது நோக்கம் தடைப்பட்டுவிடும்.

இதே வேளை இவா்களது தலையில் பெறுமதி இல்லாத சூரிய மின்கலத்திற்கு மேலதிக தொகையும் கட்டப்பட்டு நிர்க்கதியில் நிற்கும் நிலை தோன்றும் பிரமிட் முறையை இலங்கையில் தடைசெய்துள்ளது மத்திய வங்கி.

அது சட்டவிரோதமானதும் சிறைத் தண்டனை வழங்கப்படவேண்டியதுமான ஒரு செயல் எனவும் மத்தியவங்கி அறிவித்தும் குறித்த பிரமிட் முறையை வடபகுதி மக்களின் தலையில் கட்டி அவா்களை பணமற்றவா்களாக முயற்சிக்கின்றன தென்பகுதியில் இருந்து வந்திருக்கும் மோசடிக் கும்பல்கள். இம் மோசடிக் கும்பல்களுக்கு சில படித்த யாழ்ப்பாணத்து முட்டாள்களும் துணை போவது வேதனையளிப்பதாக உள்ளது.

இவ்வாறான பிரமிட் முறையில் கொள்ளையடிக்கும் கும்பலுக்கு யாழ் பலலைக்கழக மாணவா்கள், மாணவிகள், அரச அதிகாரிகள் ஆகியோரும் ஒத்துழைப்பு வழங்குவது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கின்றது.
.

அப்போது இந்த பிரமிட் முறை 220 ம் அடுக்கில் பத்து இலட்சத்தைத் தாண்டிவிடும். இத் தொகை குடாநாட்டின் சனத் தொகையின் கிட்டத்தட்ட இரு மடங்காகும். குறித்த ஒரு நபரைத் தாண்டி இருபதாவது நபரின் அடுக்குக்குள்ளேயே இந்த பிரமிட் முறையால் ஏராளமானவா்கள் நடுத்தெருவில் வந்துவிடுவா்.

இந்த முறையால் இலாபமடையப்போவது 28 ம் அடுக்கில் உள்ளவா்கள் மட்டுமே. இது சாதாரணதர கணித அறிவு உள்ளவா்களே யோசித்துக் கண்டு பிடிக்கும் விடயமாகும்.

ஏற்கனவே யாழ்ப்பாணம், வன்னி ஆகிய இடங்களில் உள்ள மக்களை ஆட்டிப்படைக்கும் லீசிங், சீட்டு, மற்றும் தரமற்ற பொருட்கள் விற்பனை ஆகியவற்றுடன் இந்த பிரமிட் என்னும் அரக்கனும் சோ்ந்துள்ளதை அனைவரும் உணருதல் அவசியம்.

நவீனரக கார்களிலும் ஆடம்பரத் தோற்றங்களுடனும் இவ்வாறான கள்ளா்கள் உங்களை நோக்கி வரலாம். அவா்களுக்கு நீங்கள் காட்ட வேண்டியது உங்களின் செருப்பை மாத்திரமே!!! அப்படி இல்லாது அவா்களின் தோற்றத்திலும் பேச்சிலும் மயங்கினால் உங்களுக்கு செருப்பும் இல்லாத நிலை ஏற்படும்.