பிரம்மபுத்திரா நதி அபாய மட்டத்தைத் தாண்டி வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.

வியாழன் ஓகஸ்ட் 04, 2016

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் படி, 14 மாவட்டங்களில் உள்ள 638 கிராமங்களில் 7.69 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

நேற்று வரை 19 மாவட்டங்களில், 804 கிராமங்களில் சுமார் 10 லட்சம் பேர் வெள்ளத்தினால் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

மாநிலம் முழுதும் வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

துப்ரி பகுதி மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளடு. இப்பகுதியில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பர்பீட்டா பகுதியில் சுமார் 1 லட்சம் பேரும், கோபால்புராவில் 86,000 பேர்களும் வெள்ளத்தில் உடைமைகளை இழந்து அவதியுற்றுள்ளனர்.

மாநிலம் முழுதும் 118 நிவாரண முகாம்கள் மற்றும் உணவு, குடிநீர் விநியோக மையங்கள் செயலில் உள்ளது, இதில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 23,405 பேர் பயனடைந்துள்ளனர்.

20,000 ஹெக்டேர்களுக்கும் கூடுதலான பயிர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதுதவிர ஏகப்பட்ட சாலைகள், பாலங்கள், உள்கட்டமைப்புகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

நிமாதிகாட், துப்ரி டவுன் பகுதியில் பிரம்மபுத்திரா நதி அபாய மட்டத்தைத் தாண்டி வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.

ss