பிரான்சில் உள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்கான அழைப்பு !

யூலை 24, 2018

சுவிஸ் தமிழர் இல்லம் நடாத்தும் தமிழர் விளையாட்டு விழா 2018 தொடர்பாக தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு விளையாட்டுக் கழகங்களுக்கு  பிரான்சில் உள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்கான அழைப்பு   என்ற  தலைப்பில் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதில்,

சுவிஸ் தமிழர் இல்லத்தால் நடாத்தப்படும் 2018 ஆம் ஆண்டுக்கான தமிழர் விளையாட்டுவிழா 11, 12 ஆம் நாள் ஓகஸ்ட்மாதம் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் நடைபெறும் தமிழீழக் கிண்ணத்திற்கான உதை பந்தாட்டப் போட்டியில் பங்கு பற்றலில்  கடந்த மூன்று ஆண்டுகளாக சீரற்ற தன்மை காணப்பட்டது.

இது தொடர்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சுவிசும் கலந்து பேசியதற்கு அமைய இம்முறை (2018 இல்) சுவிசு தமிழர் விளையாட்டு விழாவில் பிரான்சில் இருந்து பங்கு கொள்ளும் விளையாட்டுக் கழகங்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு , தமிழர் விளையாட்டுத் துறையின் ஒப்புதலைப் பெறும் விளையாட்டுக் கழகங்களே அனுமதிப்பதாக முடிவு காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக பிரான்சில் உள்ள விளையாட்டுக் கழகங்கள் பங்கு கொள்ள அனுமதிப்பது தொடர்பாக தமிழர் விளையாட்டுத் துறை பிரான்சால் 29.07.2018 அன்று 15.00மணிக்கு சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கு கொள்ள விரும்பும் விளையாட்டுக் கழகங்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு , தமிழர் விளையாட்டுத் துறையுடன் தொடர்புகொண்டு வரவை உறுதி செய்து கொள்ளவும். எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது 

ஆவணம்: 
செய்திகள்
செவ்வாய் August 07, 2018

தமிழினத்திற்கு முகமும், முகவரியும் தந்த தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்த அன்னை பார்வதியின் பிறந்த நாளை தமிழீழ தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத்தமி

வெள்ளி யூலை 27, 2018

 TELO  நடாத்தும் கறுப்பு யூலை நிகழ்விற்கும் எமதமைப்புக்கும் (TCC) எந்த வித தொடர்பும் இல்லை