பிரான்சில் எட்டாம் நாளில் Sarrebourg நகரில் இருந்து ஆரம்பமான ஈருருளிப் பயணம்!

Monday September 10, 2018

கடந்த (03.09.2018) அன்று பிரான்சு நாடாளுமன்றம் முன்பாக ஆரம்பமான ஜெனிவா நோக்கிய மூன்று மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணம் இன்று (10.09.2018) திங்கட்கிழமை எட்டாவது நாளில் Sarrebourg  நகரில் காலை 10.00 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு ஆரம்பமானது.

இன்று Sarrebourg மாநகர மண்டபத்தில் நகரபிதாவின் செயலாளரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கையளித்தபடி நீதிக்கான ஈருருளிப் பயணம் தொடர்கின்றது .

கடந்த 1ம் திகதி பிரித்தானியாவில் ஆரம்பித் ஈருருளிப் பயணம் நெதர்லாந்தை வந்தடைந்து பின்னர் தொடர்ந்து பெல்ஜியம், ஜேர்மனி, பிரான்சு ஸ்ராஸ்புர்க்கை நாளை (11.09.2018) மதியம் வந்தடைவதுடன், கடந்த 3ம் திகதி பாரிசிலிருந்து புறப்பட்ட ஈருருளி பயணப்போராட்ட வீரர்களும் ஒன்றாக சந்தித்து நாளை (11.09.2018) செவ்வாய்க்கிழமை பி.பகல். 15.00 மணி முதல் 18.00மணிவரை ஐரோப்பிய நாடாளுமன்றம் முன்பாக நடைபெறவுள்ள ஓன்று கூடலிலும் கலந்து கொள்ளவுள்ளனர்.