பிரான்சில் ஏழாம் நாளில் AMANCE நகரில் இருந்து ஆரம்பமான ஈருருளிப் பயணம்!

செப்டம்பர் 09, 2018

பிரான்சில் இருந்தது கடந்த (03.06.2018) அன்று பிரான்சு நாடாளுமன்றம் முன்பாக ஆரம்பமான ஜெனிவா நோக்கிய மூன்று மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணம் இன்று (09.09.2018) ஞாயிற்றுக்கிழமை 7 வது நாளில் AMANCE நகரில் காலை 10.00 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு ஆரம்பமானது.

நேற்று மாலை NANCY நகரை ஈருருளிப் பயணம் சென்றடைந்தது. இன்றும் செல்லும் வழிகளில் உள்ள மாநகர சபைகளில் கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கையளித்தபடி சென்றனர். இன்று மாலை Sarrebourg நகரை ஈருருளிப் பயணம் சென்றடைந்தது.

கடந்த 1ம் திகதி பிரித்தானியாவில் ஆரம்பித் ஈருருளிப் பயணம் நெதர்லாந்தை வந்தடைந்து பின்னர் தொடர்ந்து பெல்ஜியம், ஜேர்மனி, பிரான்சு ஸ்ராஸ்புர்க்கை 11.09.2018 மதியம் வந்தடைவதுடன், கடந்த 3ம் திகதி பாரிசிலிருந்து புறப்பட்ட ஈருருளி பயணப்போராட்ட வீரர்களும் ஒன்றாக சந்தித்து 11ம் நாள் பி.பகல். 3.00மணி முதல் 6.00மணிவரை ஐரோப்பிய பாராளுமன்றம் முன்பாக நடைபெறவுள்ள ஓன்று கூடலிலும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இணைப்பு: 
செய்திகள்
புதன் செப்டம்பர் 19, 2018

சிறிலங்காப்பேரினவாதஅரசினால் தொடர்ச்சியாகதமிழ் மக்கள் மீதுமேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண

திங்கள் செப்டம்பர் 17, 2018

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம்

திங்கள் செப்டம்பர் 17, 2018

இலங்கையின் கொடிய அரசின்  இனவழிப்புக்கு நடவடிக்கைக்கை நீதி கோரியும் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடனும் இன்று (17.09.2018 ) சுவிஸ்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஈகத்தியாகி ம

ஞாயிறு செப்டம்பர் 16, 2018

சேர்ஜி தமிழ்ச்சோலையில் நேற்று தியாக தீபம் திலீபனின்  31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.