பிரான்சில் ஐந்தாம் நாளில் Sampigny நகரை அடைந்த ஈருருளிப் பயணம்!

சனி செப்டம்பர் 08, 2018

பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கிய மூன்று மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணம் இன்று (07.09.2018) வெள்ளிக்கிழமை ஐந்தாவது நாளில்  Vitry le Francois இல் இருந்து சுமார் 83 கிலோ மீற்றர் தூரங்கள் பயணம் செய்து மாலை 17.00 மணியளவில் Sampigny நகரைச் சென்றடைந்தது.

இன்றைய பயணம் ஈருருளிப் பயண மனிதநேயச் செயற்பாட்டாளர்களுக்கு கடும் சவாலாக அமைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. பயணித்த பாதைகள் கடும் ஏற்றம் நிறைந்ததாக இருந்தமையே இதற்குக் காரணமாகும்.


(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - ஊடகப்பிரிவு)