பிரான்சில் கேணல் பரிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

நவம்பர் 13, 2017

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சின் பொறுப்பாளராக இருந்து வழிநடத்தி 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று (08.11.2017) காலை 9.00 மணிக்கு கேணல் பரிதி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் கேணல் பரிதி அவர்களின் பெற்றோரால் ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தி ஆரம்பமானது .

தொடர்ந்து பகல் 11.00 மணிக்கு கேணல் பரிதி அவர்களின் கல்லறை அமைந்துள்ள பந்தனில் அவரின் கல்லறை மீது தமிழீழத் தேசியக் கொடி போர்த்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சுவிஸ் பணிமனைப் பொறுப்பாளர் திரு. ரகுபதி அவர்கள் ஏற்றிவைத்தார்.

கேணல் பரிதி அவர்களின் கல்லறையில், கேணல் பரிதியின் பெற்றோர் ஈகைச்சுடர் ஏற்றி மலர் மாலையினை அணிவித்தனர்.அகவணக்கத்தைத் தொடர்ந்து சுடர்வணக்கமும், மலர் வணக்கமும் இடம் பெற்றது.மக்கள்பேரவை பிரான்சின் உறுப்பினர் திரு.மோகன் சிறப்புரை ஆற்றினார்.

அவர் தனது உரையின் போது கேணல் பரிதி அவர்களின் ஆழுமை குறித்தும், அவரது ஒவ்வொரு செயற்பாடும் தேசியப்பற்றுடன் சகலரையும் அரவணைத்து செல்வதாக இருந்ததாகவும், தலைமை ஏற்பவர்கள் ஆழுமை செலுத்துபவர்களாக மட்டும் இருக்கக் கூடாது முதலாவது ஆளாக எந்தச் செயற்பாட்டிலும் முன்னின்று செயற்பட்டவர் கேணல் பருதி எனத் தெரிவித்தார்.

இதேவேளை பகல் 15.00 மணிக்கு பிரான்சு மண்ணில் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி, தழிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் லெப.கேணல் நாதன், ஈழமுரசு பத்திரிகையின் நிறுவக ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோரின் படுகொலைக்கு நீதி கேட்டு பிரான்சு பாராளுமன்றத்திற்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் இடம் பெற்றது.

இணைப்பு: 
செய்திகள்
வெள்ளி நவம்பர் 17, 2017

தமிழீழ நினைவுகளை தாங்கிய சிறப்பு வெளியீடுகள்  வழமைபோன்று இவ் ஆண்டும் மாவீரர் நாளன்று  வெளிவருகின்றன.

வெள்ளி நவம்பர் 17, 2017

மாவீரர் மாதமான கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, மாவீரர்  வாரத் தொடக்க நாளான  கார்த்திகை 20.11.17 முதல் 27. 11.17 வரை இந்து ஆலயங்களிலும்.  தேவாலயங்களிலும்.

வியாழன் நவம்பர் 16, 2017

குறித்த நினைவுத் தூபி மாவீரர்களின் தியாகங்களையும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறுகளையும் வேண்டுமென்றே கொச்சைப்படுத்தியுள்ளது...

வியாழன் நவம்பர் 16, 2017

நெருக்கடியான காலகட்டங்களில் உண்மைகளை வெளிக்கொண்டுவர துணிச்சலோடு செயற்பட்ட ஓர் சிறந்த ஊடகப் போராளி...

புதன் நவம்பர் 15, 2017
தமிழின அழிப்பை எதிர்கொள்ளலும், நினைவுகூரலும் என்ற தொனிப்பொருளுடன் கடந்த 04.11.2017 சனிக்கிழமை பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தால் அரசறிவியல் மாநாடு வெகு சிறப்பு
செவ்வாய் நவம்பர் 14, 2017

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவு