பிரான்சில் தடம் பதிக்கும் இளைய தலைமுறையினர்

March 08, 2018

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் நாடாத்தப்படும் தமிழியல் பட்டப்படிப்பில், கடந்த 2017 ஆண்டு மார்கழி மாதம் நடந்த நுழைவுத் தேர்வில் செல்வி கார்த்திகா வன்னியசிங்கம்,இந்திரஜித் இராஜசூரியர், அனுஷியா அருட்குமரன் ஆகியோர் அதிதிறன்புள்ளிகளை பெற்றுள்ளனர்.

 பிரான்சு தமிழ்ச்சோலையில் வளர்தமிழ் 12 வரை பயின்ற இளந்தலைமுறையினர் இந்தத் தேர்வில் தோற்றியிருந்ததோடு அனைத்து மாணவர்களும் இளங்கலைமாணி (B.A) பட்டப்படிப்பிற்கான சித்தியை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் கடந்த 2011 தொடங்கப்பட்ட தமிழியல் பட்டப்படிப்பை இதுவரை 50 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் நிறைவு செய்துள்ளனர்.

அத்தோடு கடந்த மூன்று ஆண்டுகளாக தியாக தீபம் திலீபன் ஆய்வரங்கின் மூலம் பல ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எமது இளையோரை தமிழ் மொழியில் ஊக்குவிக்கும் பொருட்டு பட்டி மன்றங்களை நிகழ்த்தி வருவதோடு, ஈழத்தமிழர்களின் வாழ்வியல் கலைகளின் ஒன்றான நாட்டுக்கூத்துகளையும் இளையோரிடம் கொண்டு சேர்க்கும் பணியை தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டப்படிப்பு மாணவர்கள் தமது தயாரிப்பில் நடாத்தி வருவதும் இங்கு குறிப்பிட வேண்டியதொன்றாகும்.

இதுவரை பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவை எதிர்வரும் 16.09.2018 அன்று நடாத்துவதற்கு பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் விரிவான ஏற்பட்டுகளை செய்து வருகின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இணைப்பு: 
செய்திகள்
வியாழன் March 22, 2018

தமிழகத்தின் தமிழினப் பற்றாளர்களில் குறிப்பிடக்கூடியவரான திரு. மருதப்பன் நடராஜன் அவர்கள் உடல்நலக்குறைவினால் இன்று அதிகாலை காலமான செய்தி எம்மை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.

செவ்வாய் March 20, 2018

50க்கும் மேற்பட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் தமிழர் சார் பிரதிநிதிகளின் உரைகளைக் குழப்பியடித்துவருவதாக