பிரான்சில் நடைபெற்ற தமிழீழத் தேசிய தலைவரின் 63 அகவையின் கொண்டாட்டம்!

Wednesday December 06, 2017

தமிழினத்திற்கொரு காப்பரனாய், தமிழின எதிரிகளுக்கு சுட்டெரிக்கும் அக்கினியாய் தமிழர் வரலாற்றுக்காலம் தந்த எங்கள் இனத்தின் தலைவனாய், தந்தையாய், தனையனாய், சகோதரனாய், தம்பியாய், அண்ணனாய் எல்லாமாய் தமிழர் நெஞ்சங்களிலே என்றும் குடியிருக்கும் தமிழீழத்தின் தேசியத் தலைவன் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் 63 வது அகவையை தமிழீழத்திலும், தமிழ்நாட்டிலும், உலகமெங்கும் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் நவம்பர் 26ல் தமது சொந்தத்தில் ஒருவாராக வரித்துக் கொண்ட அந்த வரிப்புலி வீரனின் பிறந்த நாளினை சிற்பாக கொண்டாடி வருகின்றனர். 

அந்த வகையில் 2ம் நாள் சனிக்கிழமை பிரான்சு பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான 92 மாவட்டத்தில் உள்ள சுரநடை ஆயடஅயளைழn  பிரதேசத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தங்களுடைய குடும்பத்தில் ஒருவராக எங்கள் இனத்தின் தேசிய தலைவனை நினைத்துக் கொள்கின்ற லட்சோப லட்ச மக்களில் ஒருவர்களில் ஒருவராக இருக்கும் திரு. திருமதி. செல்வா குடும்பத்தினர் எமது மக்களுடனும், எம் எதிர்கால குழந்தைகளுடனும் ஒன்றாக இணைந்து எம் தலைவன் பிறந்தநாளினை சிறப்பாக கொண்டாடியிருந்தனர்.

கடந்த ஒரு தசாப்தங்களுக்கு மேலாக தனது இல்லத்திலும் தனது குடும்பத்தினருடன் இக்குடும்பம் கொண்டாடிய தேசியத் தலைவன் பிறந்த நாள் சற்று விரிவடைந்து மண்டபத்தில் செய்ய வேண்டிதொரு நிகழ்வாக இது அமைய வேண்டும் என்ற பலரின் விருப்பத்திற்கமைய கடந்த சில வருடங்களாக மண்டபத்தில் இந்த கொண்டாட்டம் நடைபெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது. 

இந்த வருடம் நடைபெற்ற தலைவன் பிறந்நாள் எங்கும் தேசிய எழுச்சி நிறங்களாலும், தேசியக்கொடியாலும், தேசியத் தலைவன் படங்களுடனும், தேசிய தலைவன் பாடல்கள், தேசியத்தலைவன் பாடல் எழுச்சி நடனங்கள், தலைவன் பற்றி அக்கினிக் கவிஞனின் எழுச்சிக் கவிதைகளுடனும், எழுச்சி உரைகளுடனும் தேசியத் தலைவனின் நினைவுகளுடன் எங்கள் மூச்சுக்காற்று நெஞ்சங்கள் எல்லாம் நிறைந்து போய்யிருந்தது. 

இந்தக் கொண்டாட்டத்தில் எங்கள் இளம் எதிர்கால சந்ததியினர் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாது தாம் கண்ணால் காணாத தங்கள் தலைவனை எவ்வாறு தங்கள் மனதில் பதியவைத்துள்ளார்கள் என்பதை தமது கலைவெளிபாடுகள் மூலம் அவர்கள் காட்டி பலத்த கரகோசத்தைப் பெற்றிருந்தார்கள். எம் தேசக்கலைஞர்கள் ஒன்று சேர்ந்து ஊசி என்ற தலைப்பில் தமிழீழத்தின் நிகழ்கால உண்மைச்சம்பவத்தை அடிப்படையை கொண்ட நாடகத்தை வழங்கி அனைவர் கண்களிலும் கண்ணீரை வரவைத்திருந்தனர். வந்திருந்த குழந்தைகளுடன்  ஆசிரியர் திரு. சத்தியதாசன் அவர்கள் கேக் வெட்டி தலைவனுக்கு பாடல்களும் பாடப்பட்டது. 

ஒரு கப்பலை சரியாக நகர்த்தி செல்ல அதற்கு பொறுப்பாக விடப்படும் தலைவனுக்கு எவ்வளவு பொறுப்பு உள்ளதோ அதே போலவே ஒருநிகழ்வுக்கு அதை ஒழுங்கு படுத்தி அறிவிப்பு செய்யும் அறிவிப்பாளருக்கும் பெரும் பொறுப்பு உள்ளது போல இந்த நிகழ்வை மிகவும் சிறப்பாக சிறந்த அறிவிப்பாளர்களில் ஒருவரான சத்தியா அவர்கள் ஒவ்வொரு நிகழ்வுக்கும் அதன் காரணத்தை அர்த்தத்தை விளக்கங்களை தலைவன் பிறந்த தினத்திற்கு ஏற்ற வகையில் செய்திருந்தமை மிகுந்த பாராட்டுக்குரியது. 

சிறப்புரையை திரு. மேத்தா அவர்கள் வழங்கியிருந்தார். எம் தலைவர் எங்கள் மனங்களிலும் அனைத்து தமிழர்களின் நெஞ்சங்களில் எல்லாமுமாகவே வாழ்கின்றார். 

ஆயிரம் வருடகாலத்திற்கு பின் ஓர் புதிய புறநாறுற்று வரலாற்றை தந்தவர் எங்கள் தேசியத்தலைவர் என்றும், தற்பொழுது அவரின் வருகையை எம் தமிழ் மக்கள் மட்டுமல்ல ஏன் சிங்கள தேசமும் மக்களும் தான் எதிர்பார்த்து நிற்கின்றது. உலகமும் இப்படியொரு போராளி இருந்ததை இந்த இடைவெளியில் தான் உணர்ந்திருக்கிறது. 

அதனுடைடைய மனமாற்றத்தை அண்மைகால ஐரோப்பிய அரசின் நிலைப்பாடு உணர்த்தியுள்ளது. இந்தக் கொண்டாட்டம் சிலருக்கு உறுத்தலாய் இருக்கலாம் இது உறங்கிப்போகாது எப்பொழுதும் எத்தனை வருடங்கள் சென்றாலும் எங்கள் தலைவன் புகழ் பாடப்படப் வேண்டும். 

எங்கள் தலைவன் தனியே போர்க்கலையில் தான் வல்லவரல்ல ஒரு கவிஞன், கலைஞன், சிறந்த குடும்பஸ்தன் என்பதோடு அவர் புகழ் பாடும் பாடலையும் பாடிச்சென்றார். இந்த பிறந்தநாளினை முன்னெடுத்த தேச விடுதலை உணர்வாளர் திரு. செல்வாவும் அவர்களின் குடும்பத்தினரும் தேசவிடுதலையின் செயற்பாட்டில் குடும்பத்தினருடன் இணைந்து ஒவ்வொருவரும் செயற்பட்டு வருபவர்கள்.

 தேசவிடுதலையில் ஈடுபட்டு அதன் நன்மை தீமைகளில் முகம்கொடுப்பவர்களுக்கு த்தான் அதன் அருமை தெரியும். ஒன்றிலும் ஈடுபடாது இருந்து விட்டு அது பற்றி விமர்சனம் செய்பவர்கள் உண்மையில் தமிழர்கள் தாம் வரித்துக் கொண்ட விடுதலைக்கு எதிரானவர்களே! இந்த கொண்டாட்டம் தாங்கள் ஏன் கொண்டாட வேண்டும் என்பதை சொன்ன செல்வா தாங்கள் இல்லாத காலங்களில் எங்கள் குழந்தைகள் இதனைச் செய்ய வேண்டும் என்றே விரும்புகின்றோம் என்று தனது ஒன்றை வரிகளில் சொல்லியிருந்தமை இதன் நோக்கத்தை அனைவருக்கும் புரியவைத்திருந்தது. 

தலைவரின் பிறந்த நாளினை முன்னிட்டு தலைவரின் படம் பொறிக்கப்பட்ட நினைவுப்பரிசுகள் நிகழ்வில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு வழங்கி மகிழ்ச்சிப்படுத்தப்பட்டது. நம்புங்கள் தமிழீழம் உணர்வுப் பாடலுடன், தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் இரவு இனிய உணவுடன் நிறைவு பெற்றது. 

தாயக விடுதலையை நேசித்து புலம்பெயர் மண்ணில் இருக்கின்ற வசதிவாய்ப்புக்களை எல்லாம் விட்டுவிட்டு மண்ணையும், மக்களையும் நேசித்து அவப்பெயர்களையும், அழுத்தங்களையும், எம்மவர்களின் கேவலமான விமர்சனங்களையும் தாங்கி அனைத்தையும் ஒருபக்கம் வைத்துவிட்டு மண்ணையும், மக்களையும், எம் எதிர்கால சந்ததியையும் நினைத்து பலர் தம்மை உறுத்தி உண்மையாகவும், நேர்த்தியாகவும், சத்தியத்தின் வழியில் நின்று பணியாற்றுகின்றனர்.

 இதற்கு எல்லாம் வழிகாட்டியாக, ஆசானாக, ஓர் வரலாற்று நாயனாக இருப்பவர் எங்கள் தமிழர்களின் நெஞ்சங்களில் வாழும் எங்கள் தேசியத் தலைவர் அவர்களே! அவரின் பிறந்தநாளில் வலிகளோடும், மன அழுத்தங்களுக்குள் பணியாற்றுகின்ற பணியாளர் குடும்பங்கள் குழந்தைகள் ஒன்றாகி வருடத்தில் ஒருமுறை இவ்வாறு ஒன்று கூடி தங்கள் மனவலிமைகளை இன்னும் உறுதியாக்கிக் கொள்ளும் நிகழ்வாக இது பெரிய அளவில் அமைய வேண்டும் என்ற புதிய உத்வேகத்துடன் மனநிறைவுடன் வெளிவந்தோம்.