பிரான்சில் பயங்கரவாதத் தாக்குதல்கள் - இதுவரை 40 பேர் பலி!!

சனி நவம்பர் 14, 2015

பரிசின் பல இடங்களில் துப்பாக்கிச் சூடுகள் மற்றும் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டதை அடுத்து, பயங்கரவாதிகள் நூற்றுக்கணக்கானவர்களைப் பணயக்கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர்.

அமெரிக்காவின் பிரபல ரொக் இசைக்கச்சேரியைப் பார்த்துக் கொண்டிருந்த நூற்றுக்கணக்காணவர்களை Bataclan இற்குள் பணயக்கைதிகளாகப் பிடித்துள்ளனர். இந்த இசைநிகழ்ச்சி மண்டபத்தின் பிற்பக்கத்தால், சுட்டபடி நுழைந்த பயங்கரவாதிகள் உள்ளிருந்தவர்களைப் பணயக்கைதிகளாக வைத்துள்ளனர். இப்பகுதியில் பெருமளவில் கனரக ஆயுதங்களுடன் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு, பத்தக்லோன் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்தத் தாக்குதல்களில் 40 பேர் கொல்லப்பட்டதாகத் தற்காலிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.