பிரான்சில் புறநகர்பகுதியல் ஒன்றான பிரதேசத்தின் பிறங்கோ தமிழ்ச்சங்கத்தின் பொதுக்கூட்டம்.

நவம்பர் 06, 2017

05.11.2017 காலை 10.30 மணிக்கு தமிழ்ச்சேலை மண்டபத்தில் தலைவர் செயலாளர் நிர்வாகி தமிழ்சங்க நிர்வாக உறுப்பினர்¸ தமிழ்ச்சோலைத்தலைமைப்பணிய உறுப்பினர்¸ தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. கடந்த காலங்களில் பல்வேறு போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வெற்றிப்பதக்கங்கள்¸ வெற்றிக்கேடையங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டன. மாணவர்களின் தமிழ்மொழிக்கல்வி பற்றியும் ஆர்ஐாந்தேய் பிறங்கோ தமிழ்ச்சங்கத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் அதில் முக்கியமாக இளைய சமுகத்தினருடைய பங்களிப்பு எதிர்காலங்களில் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை யும் தெரிவு படுத்தியிருந்தனர்.

 மாணவர்களின் கலைநிகழ்வேடு மதிய உணவுடன் அந்த பிரதேசம் வாழ் மக்கள் குடும்பங்களாக வந்து கலந்து கொண்டதோடு தமது  குழந்தைகளின் கல்வியின்  எதிர்காலம் அதற்காக தமிழ்ச்சங்கத்திற்கு செய்ய வேண்டிய பணிகள் மற்றும் பொதுவான விடயங்களை கலந்து உறவாடி பேசிக்கொண்டனர். 

இவ்வாறன செயற்பாடுகள் ஒவ்வொரு பிரதேசங்களும் வருடத்தில் ஒரு முறையாவது செய்ய வேண்டும் இது எமது சமூகத்திற்கும்¸ எமது குழந்தைகளின் உறவுமுறையிலான வளர்ச்சிக்கும் கூட்டுச்செயற்பாடுகளுக்கு இதுவோர் ஆரோக்கியமாதொரு விடயம் என்பதை அன்றைய நாளில் கண்டு மகிழக்கூடியதாக இருந்திருந்தது.

இணைப்பு: 
செய்திகள்
ஞாயிறு January 07, 2018

ஜனவரி மாதம் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை), ஒஸ்ரேலியா மெல்பேர்னில் East Burwood Reserve மைதானத்தில் கேணல் கிட்டு ஞாபகார்த்த ”தமிழர் விளையாட்டு விழா 2018” நடைபெறவுள்ளது.

வியாழன் January 04, 2018

இலங்கை அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்குத் துணைபோகின்ற ஊடகமாகவே  ரூபவாகினி செயற்பட்டது