பிரான்சில் பெட்ரோல், டீசல் மீது அதிகப்படியான வரிவிதிப்பு!

ஞாயிறு டிசம்பர் 02, 2018

பிரான்சில் பெட்ரோல், டீசல் மீது அதிகப்படியான வரிவிதிக்கப்பட்டது அந்நாட்டு மக்களை கோபமடைய செய்துள்ளது, அவர்கள் தீவிர போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அதிகப்படியான வரி விதிப்பை அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மின்கட்டணமும் உயர்த்தப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது அவர்களை கொந்தளிப்பான நிலைக்கு தள்ளியுள்ளது.

அதிபர் இமானுவேல் மேக்ரோன் மீதான நம்பிக்கையை இழக்கும் வகையிலான போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. போராட்டம் நடைபெற்ற பகுதிகளில் வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளது. ஆயுதங்களுடன் சுற்றிய இளைஞர்கள் பாரீஸ் தெருக்களில் வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். வாகனங்கள் பல்வேறு இடங்களில் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

வன்முறை போராட்டம் காரணமாக அசாதாரனமான சூழ்நில உருவாகியுள்ளது, இதற்கிடையே அவசரநிலையை பிரகடனம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசத்தில் இருப்போது இருக்கும் சூழ்நிலை தொடர்பாக அதிபர் இமானுவேல் மேக்ரோன் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருடன் ஆலோசனையை மேற்கொள்ள உள்ளார். இதற்கிடையே நிலையை சரிசெய்ய யாருடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக உள்ளோம் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்குழுவுடன் அமைதியான பேச்சுவார்த்தையை நடத்த தூதும் அனுப்பியுள்ளது. வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.