பிரான்சில் மனிதநேய ஈருருளிப் பயணம் 4ம் நாளில்!

Friday September 07, 2018

தியாக தீபம் திலீபனின் 31 வது ஆண்டு நினைவேந்தலுடன் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய மாபெரும் பொங்கு தமிழ் பேரணியை முன்னிட்டும் அதற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் பிரான்சில் இருந்து மனித நேய செயற்பாட்டாளர்களின் ஈருருளிப்பயணம    06.09.2018 வியாழக்கிழமை நான்காவது நாளாக troyes  நகரில் இருந்து தொடர்கின்றது.

 அங்கு முதலாம் இரண்டாம் மகா யுத்தத்தில் மரணித்த படையினர், பொதுமக்கள் நினைவாக கட்டப்பட்டிருக்கும் நினைவுத் தூபியின் முன்னால் அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிரான்சின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கூடாக Vitry le Franois  நகரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது.