பிரான்சில் வழங்கிய மனிதநேய உதவி!

வெள்ளி டிசம்பர் 28, 2018

தாயகத்தில் கழுத்துக்குக்கீழும், இடுப்புக்கு கீழும் இயங்க முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பிரான்சின் புறநகர் பகுதியில் 95 மாவட்டத்தில் வாழும் அமரர். திரு. விக்கி அவர்களின் நினைவாக அவரின் துணைவியார் பிள்ளைகள் 12 லட்சம் பெறுமதியான 4 சக்கர நாற்காலிகளை வழங்கியிருந்தனர். அதில் 7 லட்சம் பெறுமதியான மின்சாரத்தில் இயங்கும் சக்கரநாற்காலியையும் ஒன்றையும் வழங்கியிருந்தார்கள். 

எந்த வித ஆரவாரம் இன்றி மிகுந்த சந்தோமாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மனிதநேய அமைப்பு பணியாளர்களிடம் 26.12.2018ல் கையளித்திருந்தனர். அவற்றை தாயகத்தின்கு விரைவாக அனுப்பி வைத்து உடல், மனவேதனையில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் எம் சகோதரர், சகோதரிகளின் வாழ்வில் சிறிது சந்தோசத்தையும், அவர்களை வெளியுலகிற்கு கொண்டு வருவதற்கும், மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் இவர்களின் இந்த உதவி ஓர் ஒளிமயமான புத்துணர்வையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் என நம்புகின்றோம்.

தாயக மனிதநேய அமைப்பு – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு.