பிரான்சில் வெடித்த மக்கள் போராட்டம்!

யூலை 05, 2018

பிரான்சில் இளைஞர் ஒருவரை காவல் துறையினர்  சுட்டுக்கொன்றதையடுத்து மக்கள் ஆவேசமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வன்முறையிலும் ஈடுபட்டனர். 

பிரான்சின் மேற்கு பகுதியில் உள்ள நான்டெஸ் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு 22 வயது மதிக்கத்தக்க அபுபக்கர் என்ற வாலிபர் காரில் வந்துள்ளார். அவரது காரை காவல் துறையினர் நிறுத்தி அவரை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த வாலிபர் காரை பின்னோக்கி நகர்த்தி தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. காரை நகர்த்தியபோது ஒரு காவல் துறையின் காலில் மோதியது. இதனால் மற்றொருகாவல் துறை, துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், அபுபக்கர் இறந்துவிட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலையில் தெருக்களில் திரண்டு ஆவேசமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். முகத்தை மூடிக்கொண்டு தெருக்களில் அங்குமிங்கும் ஓடிய சில இளைஞர்கள் கடும் வன்முறையில் ஈடுபட்டனர். கடைகளை அடித்து நொறுக்கினர். மருத்துவ மையம், நூலகம் உள்ளிட்ட சில கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது.

பின்னர் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு, போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.காவல் துறையினர் தொடர்ந்து ரோந்து சுற்றி வந்து கண்காணித்தனர். இந்த வன்முறை போராட்டம் காரணமாக பல மணி நேரம் பதற்றம் நிலவியது. 

செய்திகள்