பிரான்சு ஆர்ஜொன்தையில் தியாக தீபம் தீலிபன் நினைவு நிகழ்வு ஆரம்பம்!

புதன் செப்டம்பர் 16, 2015

பிரான்சு ஆர்ஜொன்தை பகுதியில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 28 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அவரது நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

 

ஆர்ஜொன்தை தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வு தொடர்ந்து 12 நாட்களும் காலை குறித்த இடத்தில் காலை 10 மணிக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

 

இறுதிநாளான 26.09.2015 சனிக்கிழமை காலை 10 மணிக்கு நினைவுத்தூபி அமைந்துள்ள இடத்தில்  அடையாள உண்ணாநோன்பு இடம்பெறுவதுடன்,  பிற்பகல் 14.00 மணிக்கு வணக்க நிகழ்வுகள் ஆரம்பிக்கும். தொடர்ந்து பிற்பகல் 15.00 மணிக்கு ஆர்ஜொன்தை தமிழ்ச்சோலை மண்டபத்தில் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

 

இந்நிகழ்வுகளில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

 

ஊடகப்பிரிவு - பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.