பிரான்சு ஆர்யொந்தைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் நினைவாக அடையாள உண்ணாநோன்பு!

செப்டம்பர் 27, 2017

பிரான்சு ஆர்யொந்தைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு தினமான நேற்று (26.09.2017) செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத் தூபி அமைந்துள்ள திடலில் அடையாள உண்ணா நோன்பு இடம்பெற்று வருகின்றது.

பிரான்சு மூதாளர் அவையைச் சேர்ந்த கிருபை நடராசா மற்றும் கிருஸ்னபிள்ளை ஆகியோர் தியாகி திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்பாக சுடர்ஏற்றி மலர்வயணக்கம் செலுத்தி உண்ணா நோன்பை ஆரம்பித்துவைத்தனர். குறித்த உண்ணா நோன்பு மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இநநிகழ்வில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை பிரான்சு லாச்சப்பல் பகுதியிலும் இன்று 15 மணிக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இணைப்பு: 
செய்திகள்
புதன் February 21, 2018

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அறவழி போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மனி தலைநகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு