பிரான்சு கிறித்தல் மாநகரப் பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

May 31, 2018

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்கு மற்றும் பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் ஏற்பாட்டில் மே மாதம் முழுவதும் தமிழின அழிப்பிற்கான கவனயீர்ப்புப் போராட்டங்கள் பாரிஸை அண்மித்த நகரங்களின் நகரசபை முன்றலில் நடைபெற்று வருவதோடு. மாநகரசபை நகரபிதாக்கள் துணைநகரபிதாக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோரை சந்தித்து எமது கோரிக்கையடங்கிய மனுக்களும் கையழிக்கப் பட்டு வருகின்றன.

அந்த வகையில் 30.05.2018 வல்து மார்ன் (Val De Marne ) பகுதியில் உள்ள கிறித்தல் (Créteil  )மாநகரசபை  முன்றலில் பிராங்கோ தமிழ்ச்சங்கம் கிறித்தலின் ஏற்பாட்டில்  (Association des Franco Tamouls de Créteil) தமிழின அழிப்பிற்கான கவனயீர்ப்புப் போராட்டம் 15h00 மணிமுதல் 17.30h மணிவரை நடை பெற்றது. 

குறித்த நிகழ்வில் கிறித்தல் மாநகர சபையின் பிரதி நகரபிதா. (adjoint Maire de Créteil) Mme Brigitte JEANVOINE அவர்கள் கலந்து கொண்டு எமது கோரிக்கை அடங்கிய மனுவையும் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து கிறித்தல் நகரபிதாவின் அலுவலக அதிகாரியும் எமது கவனயீர்ப்பில் கலந்துகொண்டார். கிறித்தல் வாழ் பல்லின மக்களுக்கும் எமது போராட்டம் இனவழிப்பு பற்றி விளக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கிறித்தல் பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அவர்கள் மக்கள் முன் உரையாற்றினார். அவரைத் தொடந்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக திரு.ரூபன் அவர்கள் உரையாற்றினார் அவர் உரையாற்றும் போது இவ்வாறு நாம் தொடர்ந்து போராடவேண்டும் இளையோர்கள் மூலம் எமது போரட்டத்தை நாம் வாழும் நாட்டின் அரசுக்கும் மக்களுக்கும் கொண்டு சேர்க்கவேண்டும் என்று கூறினார்.

அவரின் உரையைத் தொடர்ந்து. தமிழரின் தாரக மந்திரமான "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" என்ற தாரகத்திடன் கிறித்தல் கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவு பெற்றது.

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் June 19, 2018

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...

வெள்ளி June 15, 2018

தமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத

வெள்ளி June 15, 2018

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....