பிரான்சு துயிலும் இல்லத்தில் இடம் பெற்ற லெப்.கேணல் நாதன் கப்டன் கஜன் ஆகியோரின் 21 வது ஆண்டு வணக்கநிகழ்வு!

ஒக்டோபர் 27, 2017

பாரிசில் 26.10.1996 அன்று படுகொலைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன், ஈழமுரசு பத்திரிகையின் நிறுவக ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோரின் 21 ஆண்டு வணக்க நிகழ்வு இம் மாவீரர்கள் விதைக்கப்பட்டுள்ள ஒபர்வில்லியே பன்தன் துயிலும் இல்லத்தில் (26  10  2017 )  பகல் 15.00 மணிக்கு இடம் பெற்றது.

பொதுச் சுடரினை மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் நித்தி முகுந்தினி  ஏற்றிவைத்தார். மாவீரர்களுக்கான ஈகச்சுடரினை ஏற்றி மலர்மாலையினை கப்டன் கஜனின் சகோதரர்கள் அணிவித்தனர்.அகவணக்கத்தைத் தொடர்ந்து சுடர்வணக்கமும், மலர் வணக்கமும் இடம் பெற்றது.

சிறப்புரையினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. சத்தியதாசன் ஆற்றினார், அவர் தனதுரையில் சர்வதேச நிதிப்பொறுப்பாளராக இருந்து லெப்.கேணல் நாதன் ஆற்றிய பங்குகள் குறித்தும், கவிதை, இசை, நாடகம், ஆகிய துறைகளில் இருந்து ஈழமுரசின் பத்திரிகை ஆசிரியராக பரணமித்த கப்படன் கஜனின் செயற்பாடு குறித்தும் விபரித்தார்.

தாயகவிடுதலையை நேசித்த இம் மாவீரர்களின் இலட்சிய பற்றை நாமும் தொடர இன்றைய நாளில் உறுதி எடுத்துக் கொள்வோம் எனத் தெரிவித்த திரு சத்தியதாசன் அவர்கள், இன்று தாயகத்தில் இளையோரின் வாழ்கை எவ்விதம் சீரழிக்கப் படுகின்றது என்பது பற்றியும், சிறீலங்கா அரசால் கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெறும் நில ஆக்கிரமிப்புக் குறித்தும், நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடுவது குறித்தும் விபரித்தார். இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற பாடலுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

செய்திகள்
வெள்ளி நவம்பர் 17, 2017

தமிழீழ நினைவுகளை தாங்கிய சிறப்பு வெளியீடுகள்  வழமைபோன்று இவ் ஆண்டும் மாவீரர் நாளன்று  வெளிவருகின்றன.

வெள்ளி நவம்பர் 17, 2017

மாவீரர் மாதமான கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, மாவீரர்  வாரத் தொடக்க நாளான  கார்த்திகை 20.11.17 முதல் 27. 11.17 வரை இந்து ஆலயங்களிலும்.  தேவாலயங்களிலும்.

வியாழன் நவம்பர் 16, 2017

குறித்த நினைவுத் தூபி மாவீரர்களின் தியாகங்களையும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறுகளையும் வேண்டுமென்றே கொச்சைப்படுத்தியுள்ளது...

வியாழன் நவம்பர் 16, 2017

நெருக்கடியான காலகட்டங்களில் உண்மைகளை வெளிக்கொண்டுவர துணிச்சலோடு செயற்பட்ட ஓர் சிறந்த ஊடகப் போராளி...

புதன் நவம்பர் 15, 2017
தமிழின அழிப்பை எதிர்கொள்ளலும், நினைவுகூரலும் என்ற தொனிப்பொருளுடன் கடந்த 04.11.2017 சனிக்கிழமை பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தால் அரசறிவியல் மாநாடு வெகு சிறப்பு
செவ்வாய் நவம்பர் 14, 2017

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவு