பிரான்சு பந்தன் பகுதியில் இடம்பெற்ற மாவீரர் நாள் 2017 கல்லறை நிகழ்வுகள்!

Wednesday November 29, 2017

பிரான்சில் மாவீரர் நாள் 2017 நிகழ்வுகள் பந்தனில் அமைந்துள்ள கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன், கேணல் பரிதி ஆகிய மாவீரர்களின் கல்லறைகளுக்கு அருகில் ஆரம்ப நிகழ்வாக இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற  இந்நிகழ்வில் கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன் ஆகிய மாவீரர்களுக்கான பொதுச்சுடரை நந்தியார் தமிழ்ச்சங்கத்தலைவர் சாந்திகுமார் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரை குறித்த மாவீரர்களின் சகோதரர்கள் ஏற்றிவைத்தனர்.

கேணல் பரிதி அவர்களுக்கான பொதுச்சுடரை லாக்கூர்நொவ் தமிழ்ச்சங்கத்தலைவர் புவனேஸ்வரராசா அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரை கேணல் பரிதி அவர்களின் பெற்றோர் ஏற்றிவைத்தனர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து, பிற்பகல் 13.36 மணிக்கு மணி ஒலித்தது. அதனையடுத்து மாவீரர் துயிலும் இல்லப் பாடல் ஒலித்தது. தொடர்ந்து அனைவரும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர். குறித்த நிகழ்வுகள் பிரான்சு லாப்பிளான் சென்தனி மாவீரர் நாள் நிகழ்வு மண்டபத்தில் நேரடியாகத் திரையில் காண்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு.