பிரான்சு விளையாட்டுத்துறையின் 2019 ம் ஆண்டிற்கான நிர்வாகத் தெரிவு!

வெள்ளி பெப்ரவரி 01, 2019

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர் விளையாட்டுத்துறையின் அனுசரணையில் இயங்கும் ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் 2019 ம் ஆண்டிற்கான நிர்வாகத் தெரிவு கடந்த 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை  அனைத்து விளையாட்டுக்கழகங்களின் கூட்டத்தில் நடைபெற்றிருந்தது.

கழகங்களின் பொறுப்பாளர்கள், முக்கியஸ்தர்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களுடன் ஒற்றுமையாக சிறந்ததொரு ஆரோக்கியமான நிர்வாகத்தை அன்று தெரிவு செய்திருந்தனர்.

இவ்வகையில் ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின்  நிர்வாக உறுப்பினர்களாக :-

தலைவர் : திரு. கிருபானந்தன் ( கிருபா ) அவர்கள்.

உப தலைவர் : திரு.அன்பழகன் ( அன்பு ) அவர்கள்

செயலாளர் : திரு. ஜெயந்தன் அவர்கள்.

உப செயலாளர் : செல்வன்.திவாகர் அவர்கள்

பொருளாளர் : திரு. க.பழநிவேல் (குட்டி)அவர்கள்

ஏக மனதாகத் தெரிவு செய்யப்பட்டனர். அனைத்துக்கழகங்களும் மிகுந்த உற்சாகத்துடன் வரும் காலங்களில் சிறந்த முறையில் சம்மேளனத்திற்கும் தேசியத்திற்கும் உதவுதாக உறுதியெடுத்துச் சென்றனர்.