பிரான்ஸில் கடலுக்கடியில் நிலநடுக்கம்!

Tuesday October 31, 2017

பிரான்ஸின் நியூ கலிடோனியாப் பகுதியில் கடலுக்கடியில் 7.0 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 9.3 ஆழத்தில் இன்று(31) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இதன்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தின்போது, பாதிக்கப்பட்டவர்கள் பற்றியோ அல்லது சேத விபரங்கள் பற்றியோ இன்னும் வெளியாகவில்லை.