பிரான்ஸில் கொக்கொக்கோலா, பெப்சிக்கு அதிரடித் தடை!

வெள்ளி பெப்ரவரி 03, 2017

பிரான்ஸ் நாட்டில் செயற்கை கலவைகள் கொண்டு தயாராகும் குளிர்பானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் பிரான்ஸில் மக்கள் உடல் பருமன் பிரச்சனையால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

அதாவது, 30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 56.8 சதவீதத்தினரும் பெண்களில் 40.9 சதவீதத்தினரும் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தற்போது, பிரான்ஸ் அரசு அதிரடி சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்த பிரான்ஸ் சுகாதார துறை அமைச்சர்  Marisol Touraine , கார்பனேடட் கேஸ் மற்றும் அதிகளவில் சர்க்கரை சேர்க்கப்பட்ட கோக், பெப்ஸி, ஸ்பைரைட், பேண்டா, போன்ற குளிர்பானங்கள் உணவகங்களில் குறைந்த அளவு பணத்துக்கு அதிகளவு தருகிறார்கள். மேலும், சில உணவகங்களில், உணவு வாங்கினால் குளிர்பானங்கள் இலவசமாக தரப்படுகிறது. இதனால், தற்போது இதற்கு அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

மேலும், பேசிய Marisol, பிரான்ஸ் மக்கள் உடல் பருமனுக்கு அதிகளவு குளிர்பானங்கள் குடிப்பதே முக்கிய காரணம் என மருத்துவ ஆய்வில் தற்போது தெரியவந்துள்ளது. இதனால், மக்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று கூறினார்.

ஏற்கனவே பிரான்ஸ் அரசு , உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கக் கூடிய பல உணவு பொருட்களை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.