பிரான்ஸில் பாரிய வெடிப்பு

Saturday January 12, 2019

பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் மத்தியில் ஒரு சக்தி வாய்ந்த வெடிப்பு ஏற்பட்டதால் பலர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. 

இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட தீ பரவலால் 

பல கட்டடங்கள் சேதமடைந்த நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தலைநகரிலுள்ள வெதுப்பகமொன்றிலேயே குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாகவும், இதுவரை உயிரிழப்புகள் குறித்த எவ்வித அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்றும் பரிஸ் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

குறித்த வெடிப்பு சம்பவத்தை அடுத்து தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

எரிவாயு கசிவு காரணமாகவே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றிருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாரிஸ் காவல் துறையினர்  மேற்கொண்டு வருகின்றனர்.